Search This Blog

Friday, September 5, 2014

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்


நாம் பயன்படுத்தும் நாணயத்திற்கு
இரு பக்கங்கள் இருப்பது போல்……..
உலக நிகழ்வுகளும்
இரு கோணத்தில் தான் இயங்குகிறது.
ஒன்று ஆம்,! இன்னொன்று இல்லை! என்பதே.
இதன் அடிப்படையில்……
ஒரு சாராரின் வாதம்……
கடவுள் உண்டு கல் வடிவிலே என்பர்…
ஒரு சாரார் கடவுள் இல்லை கண் எதிரிலே என்பர்.
இவ்விரண்டு பிரதிவாதிகளின் மத்தியில் இணையாதோர் கூறுவது
கடவுள் உண்டு அவர்தம் நம்பிக்கையின் உருவிலே என்று…
அந்நம்பிக்கையின் கதிரொளிப்பிழம்பே
கண்முன் காணும் நம் ஆசான் என்று…..உண்மையும் அதுவே…இன்று
ஆயிரம் திரு நாள் அகிலத்தில் அவதரித்தாலும்
நம் அடியார்களாகிய ஆசானுக்கு எடுக்கும் இவ்விழாவே
இறைவனுக்கு இன்பருளவைக்கும்
இனிய திரு நாளாகும்!!!
இப்பொன்னான பெருவிழாவில்
இன்று பெருமிதத்துடனும் …பிரமிப்பூட்டும் வகையில்
வகையறியா வர்ண ஜாலங்களை
தன்னிகரில்லா தவ மாணிக்கங்களை
மனமகிழ்ந்து மனவெழுந்து
மணிக்குரல் ஒலிக்கிறது
வாழ்க!!!!!!!!!!!! வாழ்க!!!!!!!!!!!! என்று
இவ்வாழ்த்து இன்றோடு நின்று விடாமல்
நித்தமும் ஜெயம் ஜெயமே என்று
என்றென்றும் எண்ணுமளவிற்கு
எழுச்சியின் உச்சம் கருணை, கனிவு,
கடின உழைப்பை மேற்கொள்ளும் நீரே
பொன்போல் போற்றும் பொற்பதமே.
குணமிக்கவன் குரு
குலம் விளங்க வைப்பவனும் குரு
குழந்தைகளின் குதூகலமே குரு
என்று என் எண்ணோட்டத்தை ஏணிப்படிகளாக்கலாம்.
அதற்கு இன்று ஒரு நாள் போதாதே!!!!
.ஆம்!!!.எம்முடன் பணிபுரியும் ஆசிரியப் பெருந்தகையீர்
நீவிர் நட்பின் நாயகியாய்…..
நற்பழக்கங்களைப் போதிப்பதில் நவரச நாயகிகளாய்….
முப்பாலைப் பயிற்றுவிக்கும் முப்பெரும் தேவிகளாய்…
கல்வியைப் போதிப்பதில் கணவான்களாய்த் திகழும்
தாங்களுக்கு என் தயை ஒன்றே
இன்று தந்தருளேன் நன்றே…..
குடும்பத்தில் நீட்சி பெற்றவனுக்கு
ஒரு சில உறவுகளால் மட்டுமே பெருமை. –ஆனால்
குழந்தைகளிடம் நீட்சி பெற்ற உங்களுக்கோ
ஓராயிரம் கோடியான குறும்புகளின்
உறவுகள் அல்லவா காத்திருக்கிறது…..!!!!
இவ்வுறவு எத்துறைக்கும் சாத்தியமற்றது…
நம் துறைக்கு மட்டுமே துணிச்சலானது.
துணிவுமிக்க இத்திரு நாளன்று
மாணவர்களிடம் ஒரு நல்ல நண்பனாக
வழிகாட்டியாக ………
கதா நாயகன் கதா நாயகியாக
ஞானத்தைப் போதிக்கும் தத்துவ ஞானியாக
நிமிர்ந்தால் பார்த்தால் நடந்தால்
என எல்லாவற்றிலும் மாணவர்பால் பட்ட
கண்ணாடிப்பிம்பம் போல்
ஒளிர் விடுவோம்
வருங்கால மாணவச் சந்ததிகளை சலிக்காமல்
சலனமின்றி உருவாக்குவோம்.
அன்பு என்ற பண்பை மாணவரிடம் போதிப்போம்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்.
தேவன் அன்பாகவே இருக்கிறார்.
கண்ணதாசன் கூறியது போல் …….
கருணையும் இரக்கமும் கொண்டுள்ள உள்ளந்தான்
கடவுள் வாழ்கின்ற இல்லம்.
இதுவே ஆசிரியரின் உள்ளம்...எனக்கூறி
ஆசிரியப் பணியே அறப்பணி!!!!!!!!
அதற்கு உன்னை அர்ப்பணி!!!!!!!!!!
நன்றி.

                                                                                                                  இவண்

                                                                                                                  ப.சித்ரகலா.

                                                         

No comments:

Post a Comment

Translate