Search This Blog

Wednesday, July 25, 2012

அசோகச் சக்ரவர்த்தி - சந்தோஷ் வெள்ளையன்


A fabulous Speech Performance by one of my students
Santhosh Vellaiyan

Saturday, July 21, 2012

மீசை விழுந்த வீரபாண்டிய கட்டபொம்மன்



வீரபாண்டிய கட்டபொம்மன் Performance by
Cute little Pre.K.G. 
Rising Power Star 
Praveen

Sunday, July 15, 2012

கருப்பு காந்தி



கண்ணுக்கு இனியவரே !

காட்சிக்கு எளியவரே !

கிங்மேக்கராய்த் திகழ்ந்தவரே !

கீதையின் வழி நடந்தவரே !

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவரே !

கூப்பிட்டக்குரலுக்குக் குரல் கொடுத்தவரே!

கெடு நினைவுகளை அகற்றியவரே !

கேள்வியறிவில் வளர்ந்தவரே !

கையளவுப் பொருள் கூட தனக்கெனச் சேர்க்காதவரே !

கொடுங்கோல் ஆட்சி நடத்தாதவரே !

கோமகனாய் நிலைத்தவரே !- மொத்தத்தில்

கௌதம புத்தராய் ஆசையை அறவே வெறுத்து உயர்ந்தவரே ! அவரே 

குமாரசாமி – சிவகாமி பெற்றெடுத்த செல்வமகன் காமாட்சியே !!

Saturday, July 14, 2012

காமராசர்



    மக்களின் உள்ளம் கவர்ந்தவரே !

மகான்களின் வழியில் நடந்தவரே !

மண்ணின் பெருமையைக் காத்தவரே !

மகா திட்டங்களைத் தீட்டியவரே !

மதிய உணவை அமல்படுத்தியவரே !

மங்காத ஜோதியாய்த் திகழ்ந்தவரே !

மாபெரும் மைந்தனாய் மிளிர்ந்தவனே !

மணம் மிக்க மலராய் மலர்ந்தவனே !
மனிதர் குல மாணிக்கமே !

மாசற்றத் திலகமே !
மதிப்பு மிக்க தேவகுமாரனே ! – என்

மனம் நிறைந்தவனே ! – நீவிர் இம்

மண்ணுலகை விட்டு மறைந்தாலும்

மறையாத புகழுடனே….. மக்களின்

மத்தியில் நின்றவரே !

மலையினும் உயர்ந்த பண்புள்ளம் கொண்டவரே !

மறையோனே…!…. மதிப்புடன் இருப்பவரே ! …………...என்றும்

என் நினைவில் வாழும் கதாநாயகனே !

கருப்பு காந்தியே ! கர்மவீரரே !
கல்விக்கண் கொடுத்தவரே ….. என்

காமாட்சியே … காமராசரே….

வாழ்க உம் புகழ் ! ஓங்குக என்றென்றும்…… !




Monday, July 9, 2012

பாரதிதாசன் பாடல்களுள் சில.......


இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ


எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது -- எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு -- எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை -- எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனி்யுண்டு நனியுண்டு காதல் -- தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ்மீதில்         (இனிமைத்)

தமிழ் எங்கள் உயிர் என்பதாலே -- வெல்லுந்
தரமுண்டு தமிழருக்கிப்புவி மேலே
தமிழ்என்னில் எம்முயிர்ப் பொருளாம் - இன்பத்
தமிழ்குன்றுமேல் தமிழ்நாடெங்கும் இருளாம்
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -- இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!       (இனிமைத்)


Thursday, July 5, 2012

பாரதிதாசன்



முன்னுரை:
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க்கவிஞர்களுள் உயிரென்று சொன்ன முதற்கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இவரது தமிழுணர்வு அளப்பரியது.தமிழ் தழைக்கவும், தமிழர் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும் பாடியவருள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிஞர் இவரே. இவரைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பிறப்பும், பற்றும்:
 பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில்(புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம்.புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால்புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.
கல்வி:
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலேயே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினர் கல்லூரித் தமிழாசிரியராக்கினார்.
கவிதைத்திறன்:
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்களை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
பாரதியாரிடம் அறிமுகம்:

Monday, July 2, 2012

தொழிற்கல்வி


முன்னுரை
"உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு"
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரும் நாடு"
      - என்று ஒரு நாட்டின் பெருமையையும், ஒரு நாடு இருக்க வேண்டிய முறைமையையும் கூறுவார் திருவள்ளுவர். நாம் நாடிச் செல்லாமல், அனைத்து வகைச் செல்வங்களும் நம்மை நாடி வருவதே சிறந்த நாடு என்கின்றார் அவர். ஆனால் இன்றோ "பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்" ஏற்பட்டு, வந்தாரை வாழ வைக்கும் நம் இந்திய பூமியில் சொந்த நாட்டு மக்களே வேலையின்றித் தவித்தும், வெளிநாடுகளுக்கு ஒடியும் பிழைக்க வேண்டி உள்ளது. "திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழி சிறந்ததே என்றாலும், இதன் உட்பொருள் உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது என்பதேயாகும். அதாவது வெளிநாட்டுக்குப் போ என்பதுதான். அப்படிப் பல துன்பங்களையும் தருகின்ற வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும், நம் வாட்டத்தைப் போக்கவும் நாம் செய்ய வேண்டியது ‘ஒரு தொழிலை செவ்வனேக் கற்று சிறப்புடன் வாழ்வதே ஆகும்’. இதையே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
      “செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
      திறமைதான் நமது செல்வம்” – என்று தொழிலின் இன்றியமையாமையை உணர்த்திப் பாடினார். இத்தொழிற்கல்வி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தொழிற்கல்வி என்றால் என்ன :-
      நாம் வாழும் வழியை தெளிவுபடுத்தும் கல்வியை நூற்கல்வி என்றும், தொழிற்கல்வி என்றும் இரு வகைப்படுத்தலாம். செய்முறைப் பயிற்சி ஏதுமின்றி நூல்களின் வழியாகப் பெறும் அறிவினை நூல்கல்வி என்று கூறலாம். ஏதேனும் ஒருவகைத் தொழில் செய்வதற்கு வேண்டிய பயிற்சி அளிக்கும் கல்வியைத் தொழிற்கல்வி என்று கூறலாம்.

வாழ்க்கைக் கல்வி அல்லது தொழிற்கல்வி
வேலை வாய்ப்பைத் தேடுபவனும, வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க எண்ணுபவனும் வெறும் ஏட்டுப் படிப்பை மட்டும் பயிலக் கூடாது. ஏனெனில், "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதை உணர்ந்து வெறுங்கல்வியை விட வாழ்க்கைக் கல்வி அதாவது, வாழ்க்கைக்குத் தேவையான தொழிற்கல்வியைப் பயிலுதல் வேண்டும். மேலும், ஒரு தொழிலைச் செய்யும் போது அதற்குத் துணையான சில உபதொழில்களையும் மேற்கொள்ள வேண்டும். 
"வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று"
- என்பதற்கேற்ப ஒரு தொழிலைச் செய்து கொண்டே மற்றொரு தொழிலையும் செய்வது, ஒரு யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பதற்குச் சமம் என்கிற வள்ளுவரின் சொல்லை மறவாது பின்பற்றினால் வேலைவாய்ப்பும் பெருகும். வேலையின்மையும் ஒழியும். பொருளும் சேரும். சேர்க்கும் பொருளை தீமையில்லா வழியில், சேர்க்கும் திறமறிந்து சேர்க்க வேண்டும். இதனையே குறளும்,
"அறன்ஈனும் செல்வமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
என்று உரைக்கின்றது.

Sunday, July 1, 2012

உலக வெப்பமயமாதல்


முன்னுரை:
     இன்று உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான, முக்கியமான பிரச்சினை என்று பார்த்தால் அது உலகம் வெப்ப மயமாதல் தான்.     
 உலக வெப்பமயமாதல் என்றால் என்ன? நமது அநேக தொழிற்சாலைகள்  , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2  மற்றும் SO2  ஆகியவை உள்ளது .  இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை.  அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது

பூமி வெப்பமயமாதலின் விளைவுகள்:
     பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் .  தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன .  அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் .  கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும்.
உலக அளவிலாக கடந்த 100 ஆண்டுகளில், புவி மேற்பரப்பின் வெப்ப நிலை 0.74 டிகிரி செல்சியசாக உயர்ந்துள்ளதாம். 1850ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டவைகளிலேயே கடந்த 11 வருடங்கள் தான் அதிக (2001-2012) வெப்பமயமான வருடங்கள்

பூமி வெப்பமயமாதலின் வரலாறு:
இன்று உலக நாடுகள் என்பது எல்லா நாடுகளிலும் வசிக்கும் மக்களை.
"உலகம் வெப்பமயமாதலை தடுக்க வேண்டும்...", "கடல் நீர் மட்டம் உயர்ந்து கொண்டுள்ளது...", "இந்த நூற்றாண்டிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ இந்த உலகம் கடல் நீரால் மூழ்கடிக்கப்பட்டு விடும்!"
என்று இப்போது எல்லோரும் அதைப்பற்றி பேசுகிறோம், அதை எப்படி தடுப்பது என்று மாநாடுகளெல்லாம் போடுகிறோம். ஆனால் இந்த உலகம் வெப்பமயமாதல் நேற்று, இன்று தோன்றியதில்லை.இதன் வரலாறு 17,000 ஆண்டுகள் பழமையானது!
ஆம், 17,000 ஆண்டுகள் என்று சொல்லுவது சரியானதா? அல்லது அதற்க்கு முன்போ கூட உலக வெப்பநிலையில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். முதன் முறையாக நிகழ்ந்த அந்த வெப்பநிலை உயர்வு இயற்கையானது. என்பது அறிவியலாளர்களின் கருத்து.
 

இதைப்பற்றி மேலும் அவர்கள் கூறும் பொது:


Translate