Search This Blog

Sunday, December 26, 2010

மார்கழி 11 பாடல் + விளக்கம்

அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?

கற்றுக்கறவைக் கணங்கள் பல கறந்து
 செற்றார்திறல் அழியச்சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோரெம்பாவாய்.


விளக்கம்: 
                     "கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும், பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புறிபவர்களும் ஆன குற்றமற்ற இடையர் குலத்தில் பிறந்த கொடி போன்ற அழகிய வடிவையுடயவளே! பாம்பைப் போன்ற மெல்லிடை உடையவளும், மயில் போன்ற சாயலையும் உடையவளே! மேகம் போன்ற வண்ணக்கண்ணனின் புகழை பாடிக்கொண்டு ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்துவந்து, உன் வீட்டின் முன்னர் வந்து குழுமியிருந்தும், செல்வ சீமாட்டி நீ, சிறிதும் அசையாமலும் பேசாமலும் உறங்குவதன் பொருள் என்ன?"

No comments:

Post a Comment

Translate